சத்யபாமா - சத்தமில்லாமல் ஓடிடியில் வந்த காஜல் அகர்வால் படம்
ADDED : 466 days ago
சுமன் சிக்கலா இயக்கத்தில் காஜல் அகர்வால், நவீன் சந்திரா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த 'சத்யபாமா' என்ற தெலுங்குப் படம் கடந்த ஜுன் 7ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியானது. மிகச் சுமாரான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் சத்தமில்லாமல் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு வரை டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். இந்தப் படத்திற்காக நிறையவே புரமோஷன் செய்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவிற்கு படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
தெலுங்கில் சமீப காலமாக இரண்டு, மூன்று வாரங்களிலேயே சில படங்கள் ஓடிடி தளங்களில் வந்துவிடுகின்றன. இதனால், தியேட்டர்கள் வசூல் மிகவும் பாதிப்படைவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு, 'கேங்ஸ் ஆப் கோதாவரி' படமும் சீக்கிரமே ஓடிடி தளத்தில் வெளியானது.