எல்.ஐ.சி படத்தை விட்டு விலகும் பிரபலம்...?
ADDED : 702 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ' எல்.ஐ.சி ' . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக ரவிவர்மா பணியாற்றினார். பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் விலகினார். இதையடுத்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இணைந்தார். தற்போது இவரும் இப்படத்தை விட்டு ஒரு சில காரணங்களால் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.