உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலர் சீரியலில் இருந்து விலகிய ப்ரீத்தி சர்மா

மலர் சீரியலில் இருந்து விலகிய ப்ரீத்தி சர்மா

சித்தி 2 மற்றும் மலர் ஆகிய தொடர்களில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரீத்தி சர்மா. மலர் தொடர் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார். ஆரம்பத்தில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் சமீபகாலமாக திரைக்கதை மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால் டிஆர்பியிலும் பின் தங்கி வருருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி சர்மா தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார். ஏற்கனவே ஹீரோ அக்னி விலகியிருந்த நிலையில் தற்போது ப்ரீத்தி சர்மாவும் விலகியிருக்கிறார். ப்ரீத்தி சர்மாவுக்கு பதில் இனி மலர் கதாபாத்திரத்தில் மோதலும் காதலும் தொடரில் நடித்து வந்த அஸ்வதி நடிக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !