ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சோனாக்ஷி படம்
ADDED : 464 days ago
பாலிவுட் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி தமிழில் ரஜினி ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்தார். கடைசியாக இவர் நடித்த 'ஹீராமண்டி' தொடர் வைரல் ஆனது. தற்போது இவர் நடித்து முடித்துள்ள 'ககுடா' என்ற படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சாகிப் சலீம் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ளார். திகில் மற்றும் காமெடி கலந்து உருவாகி உள்ள இப்படம் வருகிற 12ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.