கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
ADDED : 470 days ago
மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஆனவர் நடராஜன். இவரது வாழ்க்கை சினிமா ஆகிறது என்றும் அதில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்தது. பின்னர் அந்த தகவல்கள் அப்படியே மறைந்து போனது.
இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார் நடராஜன். இதுகுறித்து அவர் கூறும்போது எனது கதையை சினிமாவாக எடுக்க சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார். நான் எப்போது கூப்பிட்டாலும் இதுகுறித்து பேச வரத் தயார் என்று சொல்லியிருக்கிறார். தற்போது நான் விளையாடிக் கொண்டிருக்கும் சீசன்கள் முடிந்த பிறகு அவரை சந்திப்பேன். அவரே தயாரிப்பதாகவும், நடிப்பதாகவும் கூறியிருக்கிறார்” என்கிறார். நடராஜன்.