மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
433 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
433 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
433 days ago
வெங்கட் பிரபு இயக்கி உள்ள கோட் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் 69வது படத்தை எச்.வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அந்த படம் விஜய்யின் அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்தும் ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்துள்ள சமந்தா, நான்காவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணையப்போகிறார். அதோடு விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
433 days ago
433 days ago
433 days ago