ஆகஸ்ட் 2ல் வெளியாகும் கவினின் ப்ளடி பெக்கர்
ADDED : 430 days ago
இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் ' ப்ளடி பெக்கர்' . இதில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்
அக்ஷயா,ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்று கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் கவின் நடித்து ஸ்டார் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது ப்ளடி பெக்கர் திரைப்படமும் வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.