உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தவறை ஒப்புக் கொண்ட சமந்தா

தவறை ஒப்புக் கொண்ட சமந்தா

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் நடித்து வருவதோடு ஹிந்தியிலும் கால் பதித்து அங்கு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். பிட்னஸ் பயிற்சியாளர் அல்கேஷ் ஷரோத்ரி உடன் இணைந்து சமந்தா பிட்னஸ் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் பற்றி நேரலை ஒன்றில் பேசினார். அப்போது ஒருவர் ஆரோக்கியமற்ற பிராண்ட் ஒன்றில் விளம்பர தூதாராக சமந்தா இருந்தது பற்றி கேட்டார். அதற்கு, ‛‛கடந்த காலத்தில் அந்த தவறை செய்தது உண்மையே. வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் நடந்த தவறு. இப்போது விழிப்புடன் இருக்கிறேன். அதுபற்றிய உண்மை தெரிந்தவுடன் அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டேன்'' என்றார் சமந்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !