கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது?
ADDED : 521 days ago
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த வாரத்தில் திரைக்கு வருகிறது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகின்றார் கமல்ஹாசன்.
தக் லைப் படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்த பிறகு சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல் தனது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.