உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம்

சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம்


மலையாளத் திரையுலகில் நடிகர் சங்கம், ‛அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதன் தலைவராக நடிகர் மோகன்லால் மீண்டும் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் பொதுக்குழு கொச்சியில் கூடியது. இந்த நிகழ்வில் தற்போதைய இளம் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகரான அனூப் சந்திரன் என்பவர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் கலந்து கொள்ளாதது குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக கொச்சியில் இருந்து கொண்டே அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் அந்த நேரத்தில் நடிகை மீரா நந்தனின் திருமணத்தில் கலந்துகொண்டார் என்றும் கூறிய அனூப் சந்திரன், பஹத் பாசில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிவிட்டதால் அவர் தன்னை மட்டுமே பார்த்துக் கொள்ளும் சுயநலவாதியாக மாறிவிட்டார் என்றும் விமர்சித்தார். அவருடைய இந்த விமர்சனம் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது.

சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் அனூப் சந்திரனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அந்த பொதுக்குழுவில் பஹத் பாசில் மட்டுமல்ல நிவின்பாலி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் என தற்போதைய மலையாள முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. அதையெல்லாம் குறிப்பிடாமல் பஹத் பாசிலை மட்டும் இவர் குறிவைத்து தாக்கி இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !