விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்?
ADDED : 460 days ago
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதில் பொறுப்பாளராக இதுவரை எந்த ஒரு சினிமா நடிகர்களும் இணைக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கியிருக்கிறார் நடிகர் விமல். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த விமல், விஜய்யுடன் கில்லி படத்தில் 80 நாட்கள் பணிபுரிந்துள்ளேன். அந்த நட்பு, பாசம் காரணமாகவும், விஜய்யின் ரசிகர்களாக உள்ள எனது தம்பிகளின் விருப்பத்தின் பேரிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மற்றபடி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து எந்த யோசனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் விமல்.