மகேஷ் பாபு படத்தில் இணைந்த நாசர்
ADDED : 453 days ago
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் நாசர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 1, 2 படங்களில் நாசர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.