உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.200 கோடி மோசடி விவகாரம் : ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு மீண்டும் சம்மன்!

ரூ.200 கோடி மோசடி விவகாரம் : ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு மீண்டும் சம்மன்!

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் விசாரிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் விலையுயர்ந்த பொருட்கள் பரிசளித்ததாக வாக்கு மூலம் அளித்து இருப்பதால், இந்த வழக்கில் ஏற்கனவே நடிகை ஜாக்குலினிடம் ஐந்து முறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு இதுவரை தன்னிடம் நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலும் தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஒரு நிரபராதி என்று தொடர்ந்து நடிகை ஜாக்குலின் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !