உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டி20 கோப்பையை வென்றதற்காக ஹிப் ஹாப் ஆதியை பாராட்டிய ரசிகர்

டி20 கோப்பையை வென்றதற்காக ஹிப் ஹாப் ஆதியை பாராட்டிய ரசிகர்

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஒரு பக்கம் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த ஹிப் ஹாப் ஆதியை ஆஸ்திரேலியாவிவை சேர்ந்த ரசிகர் ஒருவர் நேரில் சந்தித்தபோது சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்றதற்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

குழம்பிப்போன ஆதி, சார் நீங்கள் யாரோ என்று என்னை தவறாக நினைத்து விட்டீர்கள் என அவரிடம் கூறியதற்கு, இல்லை நான் சரியாகத் தான் சொல்கிறேன் நீங்கள் இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா தானே என்று கூறியுள்ளார். அப்படி அவர் தன்னை ரோஹித் சர்மாவாக நினைத்துக் கொண்டு நன்றி சொன்ன பிறகு அவரிடம் தன்னை பற்றி எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டாராம் ஆதி.

சம்பந்தப்பட்ட நபர் தன்னை பாராட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் என்ன நடந்தது என்பது குறித்து நகைச்சுவையுடன் அந்த கலாட்டாவை விவரிக்கும் வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹிப் ஹாப் ஆதி, நான் என்ன, பார்ப்பதற்கு ரோஹித் சர்மா மாதிரியா இருக்கிறேன் ?” என்று கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !