கூலிக்கு பிறகு கைதி 2 : லோகேஷ் திட்டம்
ADDED : 456 days ago
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரையுலகில் வந்த சில வருடங்களிலேயே கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ' கூலி' என்கிற படத்தை இயக்குகிறார்.
கடந்த 2019ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இப்படம் வெளிவந்த சமயத்தில் கைதி 2ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர். ஆனால், லோகேஷிற்கு தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிஸியாக இருந்ததால் கைதி 2 உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.
இப்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படம் முடிவடைந்த பிறகு 2025ம் வருடத்தில் கைதி 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். மேலும், இப்படத்தில் லோகேஷ் சினிமெட்டிக் யூனிவர்சல் இடம் பெறும் என கூறப்படுகிறது.