மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
415 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
415 days ago
தமிழ், மலையாள முன்னணி நடிகர் நடிகைகள் 'மனோரதங்கள்' என்ற புதிய வெப் தொடரில் இணைந்து நடித்துள்ளனர். இந்த தொடருக்கான கதையை எம்.டி.வாசு தேவன் நாயர் எழுதி உள்ளார். இது 9 கதைகள்கொண்ட அந்தாலஜி தொடராக உருவாகிறது. இதனை பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், ரஞ்சித், ஜெயராஜ், ஷியாம் பிரசாத், மகேஷ் நாராயணன், ரத்தீஷ் அம்பாட் உள்ளிட்ட 8 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
இதில் மம்முட்டி, மோகன்லால், ஆசிப் அலி, பிஜூ மேனன், சித்திக், பஹத் பாசில், நடிகைகள் பார்வதி, நதியா, சுரபி லட்சுமி, அபர்ணா பாலமுரளி, ஆன் அகஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இத்தனை முன்னணி நடிகர், நடிகைகள் ஒரே தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை. சரிகம நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடர் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
415 days ago
415 days ago