மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
415 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
415 days ago
அமிதாப் பச்சனின் வாரிசாக இருந்தாலும் சினிமாவில் முன்னணி இடத்திற்கு வர ரொம்பவே போராடிக் கொண்டிருக்கிறார் அபிஷேக் பச்சன். அவர் நடித்த சில படங்கள் வெற்றி அடைந்தாலும் இன்னும் முதல் வரிசைக்கு வர திண்டாடிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில் அவர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.
ஷாருக்கான் கடந்த ஆண்டு பதான், ஜவான், டங்கி என மூன்று படங்கள் நடித்தார். இதில் டங்கி மட்டும் சுமாரான வரவேற்பை பெற்றது. மற்ற இரு படங்களும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்தநிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை 'கஹானி', 'ஜானே ஜான்'ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்குகிறார். இப்படத்துக்கு 'கிங்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக அபிஷேக் பச்சன் நடிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடிக்கும் தகவலை தனது டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார் அமிதாப் பச்சன். “வாழ்த்துகள் அபிஷேக். இது தான் சரியான நேரம்” என பதிவிட்டுள்ளார்.
415 days ago
415 days ago