உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வணங்கான்' தலைப்பு வழக்கு தள்ளுபடி

'வணங்கான்' தலைப்பு வழக்கு தள்ளுபடி

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வணங்கான்'. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் எஸ்.சரவணன் என்பவர் 'வணங்கான்' என்கிற டைட்டிலை இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் டைட்டிலுக்கு எதிராக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !