மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
436 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
436 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
436 days ago
பல வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்று படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்யும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெற்றி பெற்ற படங்களுக்கு ஓகே.. அதே சமயம் மோகன்லால் நடித்து கடந்த 2000ல் வெளியான ஆனால் வெளியானபோது வரவேற்பை பெறாத ‛தேவதூதன்' என்கிற படமும் விரைவில் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனர் சிபி மலயில் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஜெயப்பிரதா நடித்துள்ளார். 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ள இந்த படத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 நிமிட காட்சிகளை வெட்டி உள்ளதாக இயக்குனர் சிபி மலயில் கூறியுள்ளார்.
இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யும்படி பலரிடமிருந்து கோரிக்கை வந்ததாகவும் அதே சமயம் படம் வெளியான சமயத்தில் பலரிடம் இருந்தும் தனக்கு கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த படத்தில் இருந்து 30 நிமிட காட்சிகளை நீக்கி இருப்பதாகவும், முன்னை விட தற்போது படம் விறுவிறுப்பாக இருப்பதால் இந்த ரீ ரிலீஸில் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்த நடிகர் ஜெகதீஷ் ஸ்ரீ குமார் இந்த படத்தில் காமெடி என்கிற பெயரில் அடித்த கூத்துக்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது என்றும் அனேகமாக அந்த காட்சிகளை தான் இயக்குனர் நீக்கி இருப்பார் என்றும் பல ரசிகர்கள் தங்களது எண்ணங்களை பதிவிட்டு வருகின்றனர்.
436 days ago
436 days ago
436 days ago