ரூ.9 கோடி மதிப்பில் அஜித் வாங்கிய பெராரி கார்
ADDED : 444 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்தே அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அங்கு நடைபெற்ற இறுதி கட்டப்பிடிப்பு முடிவடைந்தது. இதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சில தினங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறுகிறார்கள். மேலும் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்ததும் துபாய் சென்ற அஜித் குமார் அங்கு 9 கோடி ரூபாய் மதிப்பில் பெராரி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.