உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானி - சமந்தாவின் படம் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நானி - சமந்தாவின் படம் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏற்கனவே வெற்றி பெற்ற பல படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் பல படங்கள் நல்ல வரவேற்பையும், மிகப்பெரிய அளவில் வசூலையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் மலையாளத்தில் கூட மோகன்லால் பல வருடங்களுக்கு முன்பு நடித்த தேவதூதன் மற்றும் மணிசித்திரதாழ் ஆகிய இரண்டு படங்களும் வரும் ஆகஸ்டில் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 2012ல் கவுதம் மேனன் இயக்கத்தில் தெலுங்கில் சமந்தா, நானி நடிப்பில் வெளியான ஏதோ வெள்ளிப்போயிந்தி மனசு படம் மீண்டும் ரீ ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த படம் கணிசமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்தப் படம் தான் ஒரே நேரத்தில் தமிழில் சமந்தா, ஜீவா நடிக்க நீதானே என் பொன்வசந்தம் என்கிற பெயரில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !