பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு
ADDED : 482 days ago
சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்த நடிகை ஜூலி, சின்னத்திரையில் சத்யா, சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் மூலம் பிரபலமானார். இவருக்கு திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை இல்லாமல் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். 42 வயதான ஜூலிக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகியிருக்கிறது. இப்படி பலவாறாக கஷ்டங்களை அனுபவித்த ஜூலி சென்ற வருட இறுதியில் கருவுற்றார். அவரது வளைகாப்பு நிகழ்வு அண்மையில் கோலாகலமாக முடிந்தது. இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதி அவருக்கு அழகிய இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜூலி இன்ஸ்டாகிராமில் பதிவிட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.