தனுஷ் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட ராயன் படத்தின் மேக்கிங் வீடியோ!
ADDED : 464 days ago
பா.பாண்டி படத்தை அடுத்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் தனுஷ். கடந்த 26ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அடுத்து ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற காதல் படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.
இந்த நிலையில் இன்று தனுஷின் பிறந்த நாளையொட்டி ராயன் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ராயன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு அவர் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் நடனம், சண்டை பயற்சி கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல் என்ற பெயரில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.