சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி
ADDED : 437 days ago
நடிகர் ஜெயம் ரவியின் 30வது படமான 'பிரதர்' எனும் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அக்கா, தம்பி சென்டிமென்ட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே தேதியில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‛அமரன்' திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.