உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கு அரசியல் ஆசை இல்லை - ஆண்ட்ரியா

எனக்கு அரசியல் ஆசை இல்லை - ஆண்ட்ரியா

மிஷ்கின் இயக்கத்தில் ‛பிசாசு 2' படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இந்த படம் வெளியாவதில் தாமதம் நிலவுகிறது. தற்போது கவின் உடன் மாஸ்க் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை பல்வேறு நேரலை இசை நிகழ்ச்சி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛தற்போது மாஸ்க் படத்தில் கவின் உடன் நடிக்கிறேன். நான் படங்களில் பாடி நீண்ட நாட்களாகிவிட்டது. விரைவில் பாட உள்ளேன். சினிமாவில் நான் ஆசைப்பட்ட ஹாரர், அட்வென்சர், காதல் மற்றும் திரில்லர் கதைகளில் நடித்துவிட்டேன். வரலாற்று கதைகளில் நடிக்கும் ஆசை இல்லை. விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. அதற்கு மேல் அதுபற்றி ஒன்றும் தெரியாது. எனக்கு அரசியல் எதுவும் இல்லை. வட சென்னை 2 உருவானால் நிச்சயம் அதில் நான் நடித்த சந்திரா கேரக்டரில் நடிப்பேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !