உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான்காவது முறையாக பிரபாஸ் உடன் இணையும் த்ரிஷா

நான்காவது முறையாக பிரபாஸ் உடன் இணையும் த்ரிஷா

அர்ஜூன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ.300 கோடி என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்போது இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க த்ரிஷா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ், த்ரிஷா இதற்கு முன்பு வர்ஷம், புஜ்ஜி காடு, பௌர்ணமி என மூன்று படங்களில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !