உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவா பிறந்தநாளில் வெளியாகும் கங்குவா டிரைலர்?

சிவா பிறந்தநாளில் வெளியாகும் கங்குவா டிரைலர்?

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யா உடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி உள்ளது.

இப்படத்தை வருகின்ற அக்டோபர் 10ம் தேதி உலகளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்போது இத்திரைப்படத்தின் டிரைலரை வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி அன்று சிவா பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கங்குவா படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !