‛அருவி' பட இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி
ADDED : 437 days ago
கடந்த 2016ம் ஆண்டில் தமிழில் அருண் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'அருவி'. சிறிய பட்ஜெட்டில் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதன்பிறகு இவரது இயக்கத்தில் வெளிவந்த 'வாழ்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
கடந்த சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அருண் பிரபு தற்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த வருடம் இத்திரைப்படம் வெளியாகும் என்கிறார்கள்.