மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் யோகி பாபு
ADDED : 438 days ago
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் கதையின் நாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் யோகி பாபு நடித்து வெளிவந்த சட்னி சாம்பார் வெப் தொடர் நல்ல வரவேற்பு பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மற்றொரு வெப் தொடரில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை சுரேஷ் செங்கையா என்பவர் இயக்குகிறார். இதில் யோகி பாபு உடன் இணைந்து லவ்லின், ரேச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியம் போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர். காமெடி டிராமா வெப் தொடராக உருவாகும் இதற்கு 'கிணத்த காணோம்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.