2026 பொங்கலுக்கு வெளியாகும் ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படம்
ADDED : 655 days ago
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' எனும் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ‛கேஜிஎப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது . இப்பத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இன்று இந்த படத்தின் பூஜை விழா பிரமாண்டமாக ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.