உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதுவும் ஆணாதிக்கமே : பிரியா பவானி சங்கர் வருத்தம்

இதுவும் ஆணாதிக்கமே : பிரியா பவானி சங்கர் வருத்தம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பிரியா பவானி சங்கர் வலம் வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி உடன் ‛டிமான்டி காலனி 2' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தபடம் அடுத்தவாரம் ஆக., 15ல் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‛ரத்னம், இந்தியன் 2' ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததுடன் அவரின் நடிப்பு பற்றியும் நிறைய கேலி, கிண்டல் வலைதளங்களில் வந்தன.

இதுபற்றி அவர் கூறுகையில் ‛‛சிரித்துக் கொண்டே ஒருவரை திட்டுவது எப்படி என எனக்கு புரியவில்லை. ஒருவரை அதிர்ஷ்டமில்லாதவர் என கூறுவது சரியானது அல்ல. அது அவரையும், அவரை பெற்றவர்களையும் பாதிக்கும். படங்கள் சரியாக போகவில்லை என ஹீரோவை பார்த்து யாராவது அதிர்ஷ்டமில்லாதவர் என கூறியது உண்டா. இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தான். பெரிய படங்கள் எனக்கு அதிர்ஷ்டத்தால் வரவில்லை, திறமையால் வந்தது'' என்றார் பிரியா பவானி சங்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !