சசிகுமாரின் ‛வயலும் வாழ்வும்'
ADDED : 433 days ago
தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் சசிகுமார். சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து சசிக்குமார் நடித்துள்ள ப்ரீடம் ஆகஸ்ட் 14 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வலைதளத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சசிகுமார். அதன் உடன், ‛‛எங்க வயலில் நடவு. வயலும் வாழ்வும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின. மதுரையை சேர்ந்த சசிகுமார் தனது சொந்த ஊரில் விவசாய நிலங்கள் வைத்துள்ளார். அதில் விவசாயமும் செய்து வருகிறார்.