புது தொடரில் எதிர்நீச்சல் கரிகாலன்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ADDED : 433 days ago
சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார் நடிகர் விமல். வீஜேவாக இருந்த இவர் நடிகராக எண்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்ச்சியிலும் விமலை கவுரவித்தனர். எதிர்நீச்சல் தொடருக்கு பின் விமல் எந்த சீரியலிலும் நடிக்காததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என ரசிகர்கள் வருந்தினர். தற்போது அவர்களது ஆசை நிறைவேறும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் விமல் நடிக்க இருக்கிறார். இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.