ஆகஸ்ட் 15ல் வெளிவரும் தமன்னாவின் பாலிவுட் படம்
ADDED : 430 days ago
தமன்னா நடித்து முடித்துள்ள பாலிவுட் படம் 'வேதா'. இதில் அவருடன் ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடித்துள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் நாயகி சர்வாரி தான் என்றாலும் தமன்னா மிக முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார். தான் நடிக்கும் படங்களில் ஒரு கவர்ச்சி ஆட்டத்தை போடும் தமன்னா, இந்தப் படத்திலும் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடி இருக்கிறார். நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி இந்தி தவிர்த்து தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.