உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்று முதல் ஹிந்தி இந்தியன் 2 ஓடிடி தளத்தில்…

இன்று முதல் ஹிந்தி இந்தியன் 2 ஓடிடி தளத்தில்…

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான தமிழ்ப் படம் 'இந்தியன் 2'. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி படம் அமையாததால் தோல்வியைத் தழுவியது.

கடந்த வாரம் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியானது. இன்று அதன் ஹிந்தி பதிப்பான 'ஹிந்துஸ்தானி 2' படம் ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி தளத்தில் வெளியான பிறகு படம் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளிவந்தது. படத்தில் உள்ள பல குறைகளை சுட்டிக்காட்டி பலரும் பதிவிட்டனர்.

தமிழில் ஓடிடியில் வெளியான பிறகு வந்த நிறைய விமர்சனங்கள் படம் குறித்த இமேஜை மேலும் பாதித்தது. இந்நிலையில் இன்று வெளியாகும் ஹிந்திப் பதிப்பிற்குப் பிறகு வட மாநில ரசிகர்கள் எப்படி விமர்சிக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !