உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழை தொடர்ந்து தெலுங்கில் வெளியாகும் டிமான்டி காலனி 2

தமிழை தொடர்ந்து தெலுங்கில் வெளியாகும் டிமான்டி காலனி 2

கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த 'டிமான்டி காலனி' படம் வரவேற்பை பெற்றது. தற்போது 'டிமான்டி காலனி 2' படத்தை அஜய் ஞானமுத்து தயாரித்து, இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படம் வெளியானது. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்தனர். சாம்.சி.ஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இப்போது டிமான்டி காலனி 2 வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதி தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !