ஐஸ்வர்ய லட்சுமியின் வெப் தொடர் குறித்து புதிய அப்டேட்
ADDED : 421 days ago
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். இது அல்லாமல் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழில் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முதல் முறையாக தமிழில் உருவாகும் புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியானது. தற்போது இந்த வெப் தொடர் குறித்து மேலும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வெப் தொடரை மோசு என்ற புதியவர் இயக்குகிறார். இதற்கு 'தீவினை போற்று' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 40 நாட்கள் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. யாலி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சோனி லிவ் ஒடிடி தளத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம்.