மீண்டும் இணைந்த 'கருடன்' கூட்டணி
ADDED : 420 days ago
சூரி நடித்த கருடன் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோ மீண்டும் சூரி நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை 'புரூஸ்லீ', 'லக்கி' மற்றும் 'விலங்கு' வெப் சீரிசை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் கே.குமார் கூறும்போது “கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கருடன்' படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் மீண்டும் சூரி நடிப்பில் புதிய படத்தை தயாரிக்கிறது.
'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார்.