உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியின் 'டிரையின்' பட அப்டேட்

விஜய் சேதுபதியின் 'டிரையின்' பட அப்டேட்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'டிரையின்'. தாணு தயாரிக்கிறார். விஜய் சேதுபதியுடன் ஐரா தயானந்த் என்ற புதுமுகம் நடித்துள்ளார். படம் பற்றிய புதிய அப்டேட்கள் வருமாறு:

படம் முழுக்க முழுக்க ரயிலில் நடக்கிறது. தனது ரயில் பயண அனுபவங்களை கொண்டு மிஷ்கின் இந்த படத்தை இயக்கி உள்ளார். முழு படப்பிடிப்பும் ரயிலில் நடந்துள்ளது. இதற்காக சில கோடிகள் செலவில் ரயில் செட் போட்டு அதில் படமாக்கி உள்ளனர். ரயிலின் உட்புற காட்சிகளை படமாக்க ஜெர்மனியில் இருந்து நவீன கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் ஒரு பயணி விஜய்சேதுபதி. அவர் மற்ற பயணிகளுடன் உரையாடி அவர்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறார் என்பதுதான் படத்தின் ஒன் லைன். விஜய்சேதுபதி கேரக்டரின் பெயர் சந்திரபாபு.

வில்லனாக நாசர் நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் உருவான 5 நிமிட காட்சியில் நாசர் அநாயசமாக நடித்துள்ளார். கண்ட்ரோல் ரூம் என்கிற ஏரியாவில் நரேன், சம்பத், கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார்கள். சிங்கம் புலி, சின்னப்பொண்ணு, ரேச்சல், பிரீத்தி, பிக்பாஸ் ஜனனி, யூகி சேது உள்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தில் 3 சண்டை காட்சிகள். வியட்நாமிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் அழைத்து வரப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு மிஷ்கினே இசை அமைக்கிறார். பெண் ஒளிப்பதிவாளர் பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !