பிசாசு 2 எப்போது ரிலீஸ் - மிஷ்கின் பதில்
ADDED : 428 days ago
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் தயாராகி உள்ள படம் ‛பிசாசு 2'. சஸ்பென்ஸ் நிறைந்த ஹாரர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதனால் இப்போது விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.
இந்நிலையில் இந்தபடம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்கு மிஷ்கின் அளித்த பதில், ‛‛விரைவில் பிசாசு 2 படம் ரிலீஸாகும். என் தயாரிப்பாளர் சின்ன பிரச்னையில் உள்ளார். அதனால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலீடு செய்தவருக்கு தெரியும் படத்தை எப்போது வெளியிடுவது என்று. ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். இப்படம் நிச்சயம் உங்கள் ஆன்மாவை தொடும்'' என்றார்.