உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் வில்லி வேடத்தில் திரிஷா

மீண்டும் வில்லி வேடத்தில் திரிஷா

‛அனிமல்' படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் ‛ஸ்பிரிட்' என்ற படத்தை இயக்க உள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் போலீஸ், மற்றொருவர் வில்லன். இந்த படத்தில் இரு நாயகிகள் நடிக்க உள்ளனர். அந்தவகையில் ஒரு நாயகியாக திரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இவர் வில்லன் பிரபாஸிற்கு ஜோடியாக வில்லியாகவே நடிக்க போகிறாராம். ஏற்கனவே தமிழில் தனுஷின் கொடி படத்தில் அரசியல்வாதி வில்லியாக திரிஷா நடித்தார். இப்போது மீண்டும் வில்லியாக அவர் நடிக்க போகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !