'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது!
'கருப்பு' படத்தை அடுத்து தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்கும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டான்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' என்று டைட்டில் வைக்க திட்டமிட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், ஒரு நடிகரின் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே மூன்று மாத இடைவெளி இருக்க வேண்டும். அதனால் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் ஏப்ரலில் வெளியாகும் நிலையில், இந்த சூர்யா 46வது படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.