உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரிவை சரிகட்ட நடிகையின் பலே திட்டம்

சரிவை சரிகட்ட நடிகையின் பலே திட்டம்


தாரா நடிகையின் மார்க்கெட், திடீரென்று சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால், இயக்குனர்கள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். குறிப்பாக ஏற்கனவே, 'ஹிட்' கொடுத்தவர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளார்.
மேலும், மார்க்கெட்டை மறுபடியும் துாக்கி நிறுத்தும் முயற்சியாக, படக்கூலியை கணிசமான அளவு குறைத்திருக்கிறார். அதோடு, தன்னை வைத்து மெகா படம் எடுக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் ரீதியாகவும் திரைமறைவில் உதவிக்கரம் நீட்டவும் துவங்கி இருக்கிறார், தாரா நடிகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !