உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோட் படத்தில் இதுவரை பார்க்காத விஜய்! -வெங்கட் பிரபு

கோட் படத்தில் இதுவரை பார்க்காத விஜய்! -வெங்கட் பிரபு


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‛தி கோட்'. செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த கோட் படம் குறித்து வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛விஜய்யை பொருத்தவரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அந்த விஷயத்தில் அவர் ரொம்ப உறுதியாக இருந்தார். அதனால் இந்த படம் அனைவருக்குமான படமாக முழு கமர்சியல் கதையில் உருவாகி இருக்கிறது. அதோடு விஜய்யை இதுவரை எந்த படத்திலும் பார்க்காத ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்ட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளேன். அதற்கு அவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதனால் கோட் படத்தை பார்க்கும் போது இதுவரை பார்க்காத வித்தியாசமான விஜய்யை ரசிகர்கள் பார்ப்பார்கள். மேலும், அதிகப்படியான பொருட்செலவில் நவீன தொழில்நுட்பத்தில் இந்த படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்திற்காக டெக்னிக்கல் ரீதியாக நாங்கள் கேட்ட அனைத்து விஷயங்களையும் தயாரிப்பு துறை செய்து கொடுத்தது. அதன் காரணமாகவே 100 சதவீதம் திருப்திகரமான ஒரு படமாக கோட் உருவாகி இருக்கிறது,'' என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !