உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப். 27ம் தேதி வெளியாகும் ஹிட்லர் திரைப்படம்!

செப். 27ம் தேதி வெளியாகும் ஹிட்லர் திரைப்படம்!


படைவீரன் பட இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி 'ஹிட்லர்' எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் ரியா சுமன், கவுதம் மேனன், ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கு விவேக் சிவா, மெர்வின் சாலமன் இசையமைக்கின்றனர். தற்போது இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என இன்று அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !