கூலி படத்தில் கலீசாவாக உபேந்திரா
ADDED : 407 days ago
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், தற்போது கன்னட நடிகர் உபேந்திராவின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூலி படத்தில் கலீசா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.