உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் மறைவு

தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் மறைவு


தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார், அவருக்கு வயது 71. கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றியவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ்.

1986ல் மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான “பூக்களைப் பறிக்காதீர்கள்” படம் அவருடைய தயாரிப்பில் வெளிவந்த முதல் படம். தரங்கை வி.சண்முகம் என்பவருடன் இணைந்து படங்களைத் தயாரித்து வந்தார். தொடர்ந்து, பிரபு நடித்த 'என் தங்கச்சி படிச்சவ', சத்யராஜ் நடித்த 'வேலை கிடைச்சிடுச்சி', அருண்பாண்டியன் நடித்த 'கோட்டை வாசல்', விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக விக்ரம் நடித்து வெளிவந்த 'தெய்வத் திருமகள்' படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

“நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல்” உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு சென்னை, திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !