உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026லாவது அஜித் படம் வருமா

2026லாவது அஜித் படம் வருமா

அஜித் நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இந்த ஆண்டு வெளியானது. இரண்டு படங்களுமே நல்ல வசூல் என்றாலும், குட்பேட் அக்லி லாபம் தந்தது. ஆனாலும் அடுத்த படத்தை இன்னும் தொடங்காமல் கார் ரேஸில் ஆர்வம் காண்பிக்கிறார். அஜித் எப்போது அடுத்த படத்தை தொடங்கப் போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரை வைத்து படம் இயக்க உள்ள ஆதிக் ரவிச்சந்திரன் பிப்ரவரியில் படம் தொடங்கி விடும் என்கிறார். ஆனால் இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையில் 2026ல் அஜித் படம் தொடங்கப்பட்டாலும் இந்தாண்டு ரிலீஸ் ஆகுமா என பலரும் கேட்கிறார்கள். ஆனால் அஜித் தரப்போ பிப்ரவரியில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் வர வாய்ப்பு அதிகம். அது மட்டுமல்ல அதற்கு அடுத்த படம் கூட 2026ல் தொடங்கப்படும். சிறுத்த சிவா உள்ளிட்ட பலர் அந்த படத்தை இயக்க போட்டியிடுகிறார்கள். அஜித்தின் சம்பள பிரச்னை மட்டும் சிக்கல் இருக்கிறது, அஜித் சம்பளத்தை குறைத்தால் வசதியாக இருக்கும். அவரோ 180 கோடி சம்பளத்தை விட்டு இறங்க மறுக்கிறார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !