உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள், 75 காலமானார்.

கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியான படம் ‛பருத்திவீரன்'. கார்த்தியின் அறிமுக படம் இது. இந்த படத்திற்காக தான் தேசிய விருது வென்றார் பிரியாமணி. மதுரை பின்னணியில் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது. யுவன் இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தில் ஊரோரம் புளியமரம் என்ற பாடல் பிரபலம். இந்த பாடலை பாடி, அந்த பாடலில் நடித்தவர் லட்சுமி அம்மாள். இவர் கிராமிய பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த இவர், வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !