உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி - கவுதம் மேனன் படத்திற்கு ‛டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' தலைப்பு

மம்முட்டி - கவுதம் மேனன் படத்திற்கு ‛டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' தலைப்பு


இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். தற்போது முதல் முறையாக மலையாளத்தில் படம் ஒன்றை இயக்குகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

இதில் நடிகர் மம்முட்டி தயாரித்து நடிக்கின்றார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‛டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என தலைப்பு வைத்துள்ளனர். இன்று மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !